தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க மாணவர்கள் தேர்வு :

தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க மாணவர்கள் தேர்வு :

Published on

திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 3 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 11 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 33 தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200 மாணவர்ளுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி அளிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கின. இச்சான்றிதழ்களை ஆட்சியர் வே.விஷ்ணு வழங்கினார். கடந்த ஆண்டு 548 பயிற்சியாளர்கள், தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றுள்ளனர். அரசினர் தொழிற் பயிற்சி நிலைய இயக்குநர் வி.செல்வகுமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர் ரெ.ராஜகுமார் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in