நவ.1 முதல் 3 வரை - இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் :

நவ.1 முதல் 3 வரை -  இரவு 7 மணி வரை  ரேஷன் கடைகள் இயங்கும் :
Updated on
1 min read

விருதுநகர், தேனி மாவட்டங்களில் நவ.1 முதல் 3-ம் தேதி வரை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண் டாடப்பட உள்ளதை முன்னிட்டு நவ.1 முதல் 3-ம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மேற்படி நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் தீபாவளி பண்டிகைக் காலம் முடிந்த பிறகு 8-ம் தேதி முதல் பொருட்களைப் பெற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in