கிருஷ்ணகிரி பிடிஓ அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் போராட்டம் :

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர், தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுப்பதாக கூறி ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர், தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுப்பதாக கூறி ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர், தரக்குறைவாகப் பேசுவதாக புகார் தெரிவித்து ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஊராட்சித் தலைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (பொ) தர், அவர்களிடம் சமாதானம் பேசினார். இதனைத் தொடர்ந்து பிடிஓவிடம் அளித்த மனுவில், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 660 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்படுவது உள்ளிட்ட அதிகாரங்கள் ஊராட்சித் தலைவர்களுக்கு உள்ளது. தீர்மானத்தின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து, பிடிஓ அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், பயனாளிகளுக் கான பணிக்கான உத்தரவை, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் தன்னிச்சையாக தலைவர்களுக்கு தெரியாமல் வழங்குகிறார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, தரக்குறைவாகப் பேசி, மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பிடிஓ கூறும்போது வீடுகட்டுவதற்கான பணி ஆணைகள், அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட துணை வட்டாட்சியர் பயனாளிகளிடம் நேரடியாக வழங்கி கையொப்பம் பெற வேண்டும். தற்போது பணிக்கான ஆணைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் அளித்த புகார் குறித்து உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in