மின்வாரிய புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் :

மின்வாரிய புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் :
Updated on
1 min read

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவமழை காலங் களில் ஏற்படும் மின்தடை தொடர் பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப் பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் மின் சேதங்கள் மற்றும் மின் தடைகளை விரைவாக சீர்செய்ய மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட் டத்தில் சிறப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.

பருவமழை காலங்களில் பொதுமக்கள் அளிக்கும் தகவல் மற்றும் மின்தடை ஏற்படும் பகுதிகளில் இந்த குழுவினர் விரைவாக சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக, மின்வாரியம் சார்பில் மின் தடைகள், மின்சார பொருட்கள் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி ‘1912’ மற்றும் ‘18004258912’ ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என வேலூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in