Regional01
அமராவதி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை :
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணியளவில் 85.01 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே அமராவதி ஆற்று கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்வள ஆதாரத் துறை அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் க.முருகேசன் தெரிவித்துள்ளார்.
