ஏடிஎம் கார்டுகளில் பணம் திருடிய  3 பேர் கைது :

ஏடிஎம் கார்டுகளில் பணம் திருடிய 3 பேர் கைது :

Published on

புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன்(56) தனது மாமியாருடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கிழக்கு ராஜ வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் ரூ.16 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கடந்த 1-ம் தேதி வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.அப்போது, கீழே விழுந்த அவருடைய ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்ட, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். இதை கவனிக்காமல் கண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், சிறிது நேரத்தில் அந்த ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.50 ஆயிரத்து 700 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரித்து, நூதன திருட்டில் ஈடுபட்ட பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த யாதவ்லால் சஹானி மகன் பெஹருலால் சஹானி(38), ராம்லக்கான் மகன் சுனில்ஷா(31), ராம்தாஸ் சஹானி மகன் அரவிந்த் சஹானி(33) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in