புளியங்குடி மரக்கடையில் தீ விபத்து - இந்து அமைப்பினர் மறியல் :

புளியங்குடி மரக்கடையில் தீ விபத்து  -  இந்து அமைப்பினர் மறியல்  :
Updated on
1 min read

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முத்து சரவணன் (40) என்பவருக்குச் சொந்தமான மரக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு முத்துசரவணன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று அதிகாலையில் கடையின் பின்புறம் உள்ள மர குடோனில் தீப்பிடித்து எரிவதை காவலாளி பார்த்துள்ளார். வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால் சங்கரன்கோவில், கடையநல்லூரில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புளியங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் சதிச் செயல் இருப்பதாக குற்றம்சாட்டியும், சதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரியும் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தென்காசி- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in