Regional01
தச்சநல்லூரில் நாளை மின் நிறுத்தம் :
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் நாளை (28-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்னோட்டத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை அகற்றி மின் பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திருநெல்வேலி நகர்ப்புற மின்வாரிய செயற்பொறியாளர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
