நாங்குநேரியில் 28 மி.மீ. மழை :

நாங்குநேரியில் 28 மி.மீ. மழை  :
Updated on
1 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 28 மி.மீ. மழை பதிவானது. கொடுமுடியாறு அணையில் 12 மி.மீ., ராதாபுரத்தில் 4, நம்பியாறு அணை, மூலக்கரைப்பட்டியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 686 கனஅடி நீர் வந்தது. 1,421 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 136.35 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.35 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 85 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. நீர்மட்டம் 79 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.36 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தென்காசியில் 20 மி.மீ., அடவிநயினார் அணையில் 12 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 10, குண்டாறு அணையில் 7, கருப்பாநதி அணையில் 4, செங்கோட்டையில் 3 மி.மீ. மழை பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in