உயர வளர்ச்சி தடைபட்டவர்களை ஊனமுற்றவர்களாக அறிவித்திடுக :

உயர வளர்ச்சி  குறைந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
உயர வளர்ச்சி குறைந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
Updated on
1 min read

உயர வளர்ச்சி தடைபட்டவர்களை ஊனமுற்றவர்களாக அறிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் ஆட்சியர் மோகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 25-ம் தேதியை உயர வளர்ச்சி தடைபட்டோர் தினமாக உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர். உயர வளர்ச்சி தடைபட்டவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். குடியிருக்கும் வீடு முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துதேவைகளுக்கும் தற்போதுள்ள கட்டமைப்புகளை பயன்படுத்தமுடியவில்லை. எனவே உயர வளர்ச்சி தடைப்பட்டவர்களை கடும் ஊனமுற்றவர்களாக அறி வித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்கவேண்டும். இவர்கள் வசிக்கும் வகையில் அரசு வீடுகள் கட்டி கொடுக்கவேண்டும். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும். மாதாந்திர உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் உணவு வசதியுடன் கூடிய சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித் தர வேண்டும். அரசுப்பேருந்துகளில் மாநிலம் முழுவதும் இலவச பயணவசதி வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in