Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பயிற்சிக்காக - உச்சிப்புளி வந்துள்ள 6 ஹெலிகாப்டர்கள் :

ராமநாதபுரம் மாவட்ட உச்சிப்புளி அருகே கடற்படை விமானத்தளம் ‘பருந்து’ உள்ளது. இத்தளம் மூலம் ஆளில்லா விமானம், ஹெலிகாப்டர், சிறியரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானத்தளம் மூலம் கடலோரப் பகுதிகளை கண்காணிக் கவும், இயற்கை பேரிடர் போன்ற காலங் களில் மீனவர்கள் உள்ளிட்டோரை மீட்கவும், மாயமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது அரக்கோணம் பகுதியிலிருந்து 6 ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் கடலோரப் பகுதிக்கு நேற்று பகலில் வந்தன. ஆறு ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் ராமநாதபுரம் பகுதியில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் மூலம் கடலோரப் பகுதிகளில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக பல்வேறு கடற்படைத் தளங்களிலிருந்து இந்திய கடற்படையினர் உச்சிப்புளி வந்தடைந்துள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x