போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம் :

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்  :
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நேற்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு மத்திய சங்க பொருளாளர் ஆர்.சிங்கராயர் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் நீலமேகம், சந்தானம், நடராஜன், பக்ருதீன் அலி அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின், துணைத் தலைவர் எஸ்.சிவானந்தம் ஆகியோர் பேசினர்.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி, நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக கரூர் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு திருச்சி மண்டல துணை பொதுச்செயலாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் தொடக்க உரையாற்றினார். கரூர் கிளை தலைவர் வி.சிவக்குமார் நன்றி கூறினார்.

திருச்சி மலைக்கோட்டை கிளை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் மணிமாறன் வாழ்த்தி பேசினார். இதில் அரசு போக்குவரத்துக் கழக சங்க பொதுச் செயலாளர் எம்.கருணாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in