திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் - ஜாதி, மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பத் தடை :

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில்   -  ஜாதி, மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பத் தடை :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரவுடிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் ஜாதி, மத ரீதியான பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜாதி, மத ரீதியான பாடல்கள், வசனங்களை ஒலிபரப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை மீறி செயல்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in