

கனமழை தொடர்வதால் தி.மலை மாவட்டத்தில் உள்ள 4 அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்கிறது.
119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக பரா மரிக்கப்படுகிறது. அணையில் 3,392 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,180 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, நீர்வரத்து முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 60 மி.மீ., மழை பெய்துள்ளது.
59.04 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக உள்ளது. அணையில் 647 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 100 கனஅடி தண்ணீரும் வெளியேற் றப்படுகிறது. அணை பகுதியில் 11.4 மி.மீ, மழை பெய்துள்ளது. இதேபோல், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 54.19 அடியாக உள்ளது. அணையில் 207 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 34 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 10 மி.மீ., மழை பெய்துள்ளது.
மேலும், 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 19.35 அடியாக உள்ளது. அணையில் 67 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 27 கனஅடி தண்ணீர் வருகிறது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 12.42 மி.மீ., மழை பெய்துள்ளதாக பதிவானது. செங்கம் பகுதியில் 33.4 மி.மீ., ஜமுனாமரத்தூர் பகுதியில் 2 மி.மீ., போளூர் பகுதியில் 40.6 மி.மீ., தி.மலை பகுதியில் 33 மி.மீ., தண்டராம்பட்டு பகுதியில் 15 மி.மீ., கலசப்பாக்கம் பகுதியில் 22 மி.மீ., கீழ்பென்னாத்தூர் பகுதியில் 3 மி.மீ., மழை பெய்துள்ளது.