திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்  -  இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :
Updated on
1 min read

திருப்பத்தூர், தி.மலை மாவட்டங் களில் இன்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, 5 முறை மெகா தடுப்பூசி முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 313 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

6-வது வாரமாக, அக்டோபர் 23-ம் தேதி (இன்று) 1,075 முகாம்கள் மூலமாக 1.61 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in