

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி(37). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், 8 வயது சிறுமியை அண்மையில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ராஜாமணி வீட்டுக்குச் சென்று சிறுமியை மீட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ராஜாமணி மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.