

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ள 2 பேராசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். கல்லூரி நிர்வாகத்தில் அனைத்து பதவிகளிலும் தகுதியானவர்களை அரசு விதிகளின்படி நியமனம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் கல்விக் கட்டணம் ஆகியவற்றில் அரசு விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும்.
பல்வேறு தலைப்புகளில் மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் போராட்டத்தில் வலியுறு த்தப்பட்டன. மூட்டா கிளை தலைவர் இருதயராஜ் தலைமை வகித்தார்.