

பாவூர்சத்திரம் அருகே பெத்த நாடார்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ஜெயச்சந்திரன் (19). திருநெல்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று வந்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தார். சீதபற்பநல்லூர் அருகே சென்றபோது, எதிரே காய்கறி பாரம் ஏற்றிவந்த சுமை ஆட்டோ, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதபற்பநல்லூர் போலீஸார் விசாரிக்கிறார்கள்.