கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - `இல்லம் தேடிக் கல்வி’ திட்டம்விழிப்புணர்வு கலைப்பயணம் தொடக்கம் :

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  `இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட  ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடக்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் `இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடக்கி வைத்தார்.
Updated on
1 min read

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் `இல்லம் தேடிக் கல்வி’ திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம் நேற்று தொடங்கியது.

கரோனா பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கஅரசு சார்பில் `இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி, வீதிநாடகம், பொம்மலாட்டம், கதைசொல்லுதல், திறன்மேம் பாட்டுச் செயல்பாடுகள் ஆகியவை நடைபெறவுள்ளன.இதன்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் `இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை பயண வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் எல்லப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வம், இளஞ்செழியன், அந்தோணிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் மோகன் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:

தமிழக அரசு கொண்டுவந்துள்ள `இல்லம் தேடிக் கல்வி’திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 72,911 மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 51, 967 மாணவ மாணவியர்கள் என 1,24, 878 மாணவ, மாணவியர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. 15 நாட்கள் கலைநிகழ்ச்சிகளை பள்ளி மற்றும் கிராம அளவில் தொடர்ந்து நிகழ்த்தவுள்ளனர் என்றார். எஸ்பி நாதா, திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கோட்டாட்சியர் அரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in