கொடுமுடி, பெருந்துறை பேரூராட்சியை - நகராட்சியாக தரம் உயர்த்த காங்கிரஸ் கோரிக்கை :

கொடுமுடி, பெருந்துறை பேரூராட்சியை -  நகராட்சியாக தரம் உயர்த்த காங்கிரஸ் கோரிக்கை  :
Updated on
1 min read

பெருந்துறை மற்றும் கொடுமுடியை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டாரத் தலைவர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் நடராஜ் மற்றும் வட்டாரத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பெருந்துறை சிப்காட் பகுதியில் இயங்கும் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடியிலோ, கால்வாயில் கலப்பதையோ தடுக்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். பெருந்துறை மற்றும் கொடுமுடியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

ஈரோடு சோலார் பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட நிரந்தரமாக இடம் ஒதுக்க வேண்டும். மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தார் சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in