

அரியலூரில் வங்கிக் கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார். ஸ்டேட் வங்கிமுதன்மை பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
முகாமில், பல்வேறு துறைகள் சார்பில் 412 பேருக்கு ரூ.6.25 கோடி மதிப்பீட்டிலும், விவசாயம் மற்றும் அதன் தொழில் சார்ந்த 71 பேருக்கு ரூ.6.16 கோடி மதிப்பீட்டிலும் வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன.