திருச்சி ஆவின் நிறுவன மேலாளராக பணியாற்றிய - அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் பணியிடை நீக்கம் :

திருச்சி ஆவின் நிறுவன மேலாளராக பணியாற்றிய  -  அதிமுக முன்னாள் அமைச்சரின்  மகன் பணியிடை நீக்கம்  :
Updated on
1 min read

திருச்சி ஆவின் நிறுவனத்தில் பொறியியல் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதியின் மகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ரங்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை அமைச்சராகவும் இருந்தவர் வளர்மதி. இவரது மகன் ஹரிராம், சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பொறியியல் பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக அயல் பணியில் திருச்சி ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, திருச்சி ஆவின் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் நிறுவப்பட்ட கொதிகலன் சரியாக இயங்கவில்லை எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, சென்னை ஆவின் தலைமையகத்தில் இருந்து அலுவலர்கள் வந்து திருச்சி ஆவின் நிறுவனத்தில் அண்மையில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, கொதிகலனை முறையாக பராமரிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, ஹரிராமை பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிர்வாக இயக்குநர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in