

மிலாடி நபியையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
அதன்பேரில்,காவல் துறையினர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அதில், 38 பேர் கைது செய்யப்பட்டனர். 813 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.