Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் 91.17 அடியானது :

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 91.17 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரத்து 231 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 197 கனஅடியானது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர் திறப்பை விட நீர் வரத்து அதிகம் இருப்பதால், கடந்த சில நாட்களாக அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 90.17 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 91.17 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 54.17 டிஎம்சி-யாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x