ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னோட்டமாக - ஏ.புத்தூர் ஏரியில் தகரக் கொட்டகை அமைப்பு : விரைவில் வீட்டுமனைகளாக மாற வாய்ப்பு

எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ஏ.புத்தூர் ஏரியின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தகரக் கொட்டகை. படம் ந.முருகவேல்
எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ஏ.புத்தூர் ஏரியின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தகரக் கொட்டகை. படம் ந.முருகவேல்
Updated on
1 min read

எலவனாசூர்கோட்டையில் உள்ள ஏரியை ஆக்கிரமிப்பதற்கு முன் னோட்டமாக ஏரியின் நடுவே தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்பிடாகம் எனும் எலவனாசூர் கோட்டை புறவழிச்சாலையில் 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏ.புத்தூர் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனை சுற்றியுள்ள சுமார் 500 ஏக்கர் விளை நிலங்களுக்கும் பயன்பெறுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற ஊரகஉள்ளாட்சித் தேர்தலில் அரசு அலுவலர்கள் கடந்த ஒருமாதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதை சாதகமாக பயன்படுத்திய சிலர் ஏரியின் நடுவே தகரக் கொட்டகை அமைத்து, ஆக்கிர மிப்புச் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடக்கியுள்ளனர். அதேபோன்று ஏரியில் மேற்கு புறத்திலும் சிலர் கொட்டகை அமைத்துள்ளனர். இதனால் வரும்காலங்களில் ஏரி இருந்த இடம்தெரியாமல் ஆக்கிரமிப்புக்குள் ளாகி விடும். விரைவில் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், மாவட்ட ஆட்சியர் உடனடியாக நீர் நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின் றனர் எலவனாசூர் கோட்டை கிராம மக்கள்.

இதுகுறித்து ஊராட்சி செயலர் ஜின்னாவிடம் கேட்டபோது, ஏ.புத்தூரைச் சேர்ந்த ஒருவர் மீன் குத்தகை எடுத்திருப்பதால் அவர் அமைத்திருக்கும் தகரக் கொட்டகை என்றார். ஆனால் மீன் குத்தகை எடுத்திருக்கும் நபர் ஏரியின் மேற்கு புறத்தில் கொட்டகை அமைத்திருக்கும் நிலையில், உண்மைக்கு புறம் பான தகவலை ஊராட்சி செயலர் தெரிவிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in