Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் : நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க உட்கோட்ட மாநாடு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டுக்கு, உட்கோட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தொடக்க உரை யாற்றினார். மாநில துணைத் தலைவர் எஸ்.மகேந்திரன் நிறைவுரையாற்றினார்.

இதில், சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணிக் காலத்திலும், பணிநீக்க காலத் திலும் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலியாக உள்ள 5,000-க்கும் அதிகமான சாலைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பி, கிராமப்புற இளைஞர் களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்பு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறை சாலைப் பணி யாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் ஜெ.ராஜா சிதம்பரம் ஆகியோர் பேசினர்.

சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் கே.ராம கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x