சங்கரன்கோவில் அருகே - ஆட்டோ ஓட்டுநர் கொலை :

சங்கரன்கோவில் அருகே  -  ஆட்டோ ஓட்டுநர் கொலை  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. அதிமுக எம்ஜிஆர் மன்றத்தில் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் இளங்கோவன் (40), ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் ஊத்துமலை அருகே பலபத்திராமபுரம் பகுதியில் இளங்கோவன் சடலம் கிடந்தது. அவரது உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீ ஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சின்ன கோவிலான்குளத்தில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in