Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவினால் - காவல்துறையால் எந்த பிரச்சினையும் வராது : அரசால் கவுரவிக்கப்படுவார்கள் என தூத்துக்குடி எஸ்பி தகவல்

உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மாவட்ட காவல் துறை சார்பாக தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விபத்து போன்ற நிகழ்வை நாடகம் மூலம் நடித்துக் காட்டினர். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

எஸ்பி பேசியதாவது: தூத்துக் குடி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 378 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 2020-ம் ஆண்டில் 344 பேர் விபத்து களில் இறந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 278 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளார்கள்.

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட்பெல்ட் கட்டாயம். விபத்து களை தவிர்க்க மக்கள் சாலை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். விபத்து நடந்தால் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பொதுமக்கள் உதவ வேண்டும். விபத்தால் பாதிக்கப்படு பவர்களுக்கு காவல் துறையினர் மட்டுமல்ல பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு 2014-ம் ஆண்டு 'குட் சமாரிட்டன் சட்டம்' என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. உதவுபவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. மருத்துவமனையிலும் கேட்க மாட்டார்கள். காவல்துறையினரும் கேட்கமாட்டார்கள்.

பொதுமக்களில் பலர் உதவு வதற்கு தயாராக இருப்பார்கள். ஆனால், காவல்துறையால் பிரச்சினை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவ முன்வருவதில்லை. உதவி செய்ய முடியாவிட்டாலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு இலவச தொலை பேசி எண் 108-க்கோ அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண் 100-க்கோ பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். காயம் பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு அரசால் பண வெகுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் எஸ்பி.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து காவல்துறையி னருக்கு விபத்தில் காயமடைந்த வர்களுக்கு முதலுதவி செய்வது குறித்த பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை அவசர மருத்துவத் துறை தலைவர் ராஜவேல் முருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x