Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

செகந்திராபாத் – ராமேசுவரம் இடையே இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் - தி.மலை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் :

செகந்திராபாத்–ராமேசுவரம் இடையே இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில், திருவண்ணாமலை மற்றும் காட்பாடியில் நிறுத்தப்பட்டு இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ராமேசுவரம் – செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து (எண்–07685) செவ்வாய்க்கிழமை களில் புறப்படும் சிறப்பு ரயில், ராமேசுவரத்தை வியாழக் கிழமை வந்தடைகிறது. பின்னர், ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து (எண் – 07686) வியாழக்கிழமை புறப்படும் சிறப்பு ரயில், செகந்திராபாத்தை சனிக்கிழமை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிறுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

செகந்திராபாத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தை புதன்கிழமை நண்பகல் 12.10 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும். அங்கிருந்து பிற்பகல் 1.52 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம் வழியாக ராமேசுவரத்தை வியாழக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு சென்றடைகிறது.

ராமேசுவரத்தில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சிதம்பரம், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.18 மணிக்கு வந்து சேரும். பின்னர், அங்கிருந்து முற்பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி ரயில் நிலையத்தை பிற் பகல் 1.45 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல் வழியாக செகந்திராபாத் ரயில் நிலையத்தை சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும்.

2 குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண் டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் என 22 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்படும். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் 19-ம் தேதி, 26-ம் தேதி, நவம்பர் 2-ம் தேதி, 9-ம் தேதி, 16-ம் தேதி, 23-ம் தேதி, 30-ம் தேதி மற்றும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி, 14-ம் தேதி, 21-ம் தேதி மற்றும் 28-ம் தேதி என 11 முறை சிறப்பு ரயில் புறப்பட உள்ளது. அதேபோல் ராமேசுவரத்தில் இருந்து வரும் 21-ம் தேதி, 28-ம் தேதி, நவம்பர் 4-ம் தேதி, 11-ம் தேதி, 18-ம் தேதி, 25-ம் தேதி மற்றும் டிசம்பர் 2-ம் தேதி, 9-ம் தேதி, 16-ம் தேதி, 23-ம் தேதி, 30-ம் தேதி என 11 முறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே சிறப்பு ரயிலில் பயணிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x