Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

திருப்பத்தூர், ஆம்பூர் பகுதிகளில் இன்று - மின் நிறுத்தம் அறிவிப்பு :

திருப்பத்தூர்/ஆம்பூர்

திருப்பத்துார் மின் பகிர்மான வட்டம் திருப்பத்துார் மின்கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (16-ம் தேதி) காலை9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பத்துார் டவுன், ஆசிரியர் நகர், பாச்சல், திரியாலம், அச்சமங்கலம், கருப்பனுார், சி.கே ஆசிரமம், பொம்மிக்குப்பம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், நந்தனம் காலேஜ், மொளகாரன்பட்டி,

கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தால கொட்டாய், புத்தாகரம், பாரண்டபள்ளி, திரியாலம், மூலக்காடு, புதுார் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பத்துார் மின் வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணி தனது செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

அதேபோல, ஆம்பூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் இன்று மின் பராமரிப்புப்பணிகள் நடை பெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆம்பூர் டவுன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x