Published : 14 Oct 2021 05:55 am

Updated : 14 Oct 2021 05:55 am

 

Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

நாமக்கல் மாவட்ட 6-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வெற்றி :

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு 6-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 12 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.


இதில், திமுக வேட்பாளர் ஏ.ஆர்.துரைசாமி, அதிமுக வேட்பாளர் ம.கண்ணனை விட 15,809 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ப.சரவணன் 439 வாக்குகளும், பாமக வேட்பாளர் எம்.மாரியப்பன் 413, தேமுதிக ஆர்.சாந்தி 213, அமமுக என்.கோபால் 67 வாக்குகளும் பெற்றனர். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என துண்டு பிரசுரம் விநியோகம் செய்த சுயேச்சை வேட்பாளர் தி.ரமேஷ் 24 வாக்குக்கள் பெற்றார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x