

நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி ராஜன் வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாமுடி(32). இவர் கடந்த 6-ம் தேதி காலை இரு சக்கர வாகனத்தில் மல்லப்பள்ளி வழியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், காயமடைந்த சாமுடி மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாமுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.