Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

தொழிற்சாலை உரிமம் ஆன்லைன் மூலமே புதுப்பிக்கப்படும் : தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் தகவல்

தொழிற்சாலைகளுக்கான உரிமங்கள் ஆன்லைன் மூலமே புதுப்பிக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கககூடுதல் இயக்குநர் ஆ.ஏ.செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்துபதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2022-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை இணைய வழியில் விண்ணப்பித்து புதுப்பிக்க அக்டோபர் 31-ம் தேதி கடைசி நாளாகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற அனைத்து தொழிற்சாலைகளின் நிறுவனத்தினரும், தங்கள் உரிமத்தை புதுப்பிக்க, https: // dish.tn.gov.in’ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து உரிமக் கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை சட்ட உரிமம் புதுப்பிக்கப்பட்டு, அதை ஆன்லைன் முறையிலேயே பதிவிறக்கம் செய்யலாம். அதற்காக எவரும் அலுவலகம் வரவேண்டிய அவசியம் இல்லை.

உரிம மாற்றம், உரிம திருத்தம் ஆகியவற்றுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, இணைய வழியில் உரிமக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்ப படிவத்தின் 3 நகல்கள் மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். உரிய காலத்தில் உரிமக் கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x