Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஆதரவற்றோர், மனநலம் பாதித்தோரை மீட்க - ‘காவல் கரங்கள்’ அமைப்புக்கு ஆம்புலன்ஸ் :

சென்னை

சென்னை பெருநகர காவல் துறை, அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் இணைந்து ‘காவல் கரங்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கிஉள்ளனர்.

ஆதரவின்றியும், உடல்நலன், மனநிலை பாதிக்கப்பட்டும் சாலைகளில் சுற்றித் திரியும் முதியோர், பெண்கள்மற்றும் குழந்தைகளை இந்த அமைப்பினர் மீட்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சைஅளித்து வருகின்றனர். இந்நிலையில், காவல் கரங்கள் அமைப்பின் சேவையைப் பாராட்டி, ஒரு வங்கி இந்த அமைப்புக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கியுள்ளது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று காவல் கரங்கள் அமைப்பிடம் இந்த வாகனத்தை ஒப்படைத்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர்கள் ராமர், ரவிச்சந்திரன், கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப் பட்டோர், முதியோர் மற்றும்பெண்களை மீட்கவும், அவர்களைமருத்துவமனை, தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லவும் இந்த வாகனம் பயன் படுத்தப்படும் என்று காவல் கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x