Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மதுரை மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு தேர்தலில் - திமுக வேட்பாளர் ஜெயராஜ் வெற்றி :

மதுரை மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயராஜ் வெற்றி பெற்றார்.

மதுரை மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு தேர்தலில் வி.ஜெயராஜ் (திமுக), தமிழழகன் (அதிமுக), வினோத் (அமமுக), பழனி (தேமுதிக), முத்துவடிவேல் (மக்கள் நீதி மையம்), ராமு தேவன் (நாம் தமிழர் கட்சி) உட்பட 9 பேர் போட்டியிட்டனர். நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் தமிழழகனைக் காட்டிலும் 9,635 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வி.ஜெயராஜ் வெற்றி பெற்றார்.

மதுரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு நடந்த தேர்தலில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி கிராம ஊராட்சி 5-வது வார்டில் பஞ்சவர்ணம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மறவன்குளம் கிராம ஊராட்சி 2-வது வார்டில் நல்லுசாமி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வடிவேல்கரை கிராம ஊராட்சி 4-வது வார்டில் அன்பழகன் வெற்றி பெற்றனர்.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கேசம்பட்டி கிராம ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக கனகராஜ், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வன்னிவேலம்பட்டி கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக முனியம்மாள், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கவுண்டம்பட்டி 4-வது வார்டு உறுப்பினராக அமுதா, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் டி.குன்னத்தூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக சுகன்யா வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x