Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஆர்டிஓ அதிகாரி வீடுகளில் சோதனை - 190 பவுன் நகை, சொத்து ஆவணம் பறிமுதல் :

சென்னை போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தவர் முரளிதரன். தற்போது தேனியில் பணிபுரிகிறார். இவரது 2-வது மனைவி ராஜேஸ்வரி சென்னை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர். இவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர் ரமேஷ்பிரபு அடங்கிய குழுவினர் முரளிதரனுக்கு சொந்தமான மதுரை தனக்கன்குளம் வீடு, சென்னை விருகம்பாக்கம் முரளிதரன், ராஜேஸ்வரியின் வீடு, தேனி பாரதி நகரிலுள்ள வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இதில் 190 பவுன் நகை, 2,468 கிராம் வெள்ளிப் பொருட்கள் ரூ.43 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.84,73,120 மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பிடிபட்டன. முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் மதுரை திருநகர், சிவகாசி உள்ளிட்ட 4 இடங்களிலுள்ள வங்கி லாக்கர்களிலும் சோதனை மேற்கொள்ள இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x