Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி :

லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கடல்மணி 424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ர.கன்னியம்மாள் 423 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர்கள் இருவரது வெற்றி- தோல்வியை ஒரு வாக்கு முடிவு செய்துள்ளதும், போட்டியிட்ட இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020-ல் நடைபெற்ற தேர்தலில் கன்னியம்மாளின் கணவர் ரமேஷ்குமாரிடம், கடல்மணி வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனிடையே, ரமேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ரமேஷ்குமாரின் மனைவி கன்னியம்மாளை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் கடல்மணி.

புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் ம.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x