Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை :

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 122 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 204 ஊராட்சி தலைவர்கள், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6 ஊராட்சி தலைவர்கள், 378 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.

மொத்தமுள்ள 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு திமுக கூட்டணியில் திமுக 11 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் போட்டியிட்டது. இந்த 12 இடங்களிலும் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது.

122 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக வெற்றிபெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சி விவரம்:

பாளையங்கோட்டை: வார்டு 2- பேச்சியம்மாள் (திமுக), 3- குமரேசன் (திமுக), 4- திருப்பதி (திமுக), 5- தெய்வானை (காங்கிரஸ்), 6- தங்கபாண்டியன் (திமுக), 7- பகவதி (திமுக), 8- ராஜாராம் (திமுக ), 12 - முரளிதரன் (திமுக), 13- ராமலட்சுமி (திமுக )

களக்காடு: வார்டு 1 - ஜார்ஜ்கோசல் (திமுக), 2- வனிதா (காங்), 3- விசுவாசம் (திமுக)

4- தமிழ்ச்செல்வன் ( சுயே).

ராதாபுரம் : வார்டு 3 - ஞான சர்மிளா (சுயே), 4- ஜேசி (திமுக), 5- அனிதா ஸ்டெல்லா (திமுக), 6- இளையபெருமாள் (திமுக), 12- ஆவுடைபாலன் (அதிமுக), 18- அருணா (திமுக).

வள்ளியூர் : வார்டு 1- ரைகானா செய்யது ஜாவித் (சுயே), 2- தா. பிலிப்ஸ் (காங்.), 3. ஞா. பொன்குமார் (திமுக), 4- டெல்சி ஓபிலிபியா (திமுக), 5- தாய் செல்வி (திமுக),6- அலெக்ஸ் கொய்ஸன் (திமுக) , 7- வெங்கடேஷ் தன்ராஜ் (காங்கிரஸ்)

அம்பாசமுத்திரம்: வார்டு 9 - பரணி சேகர் (திமுக ), 4- சுடலைமுத்து (திமுக), 7- ராமசெல்வி (திமுக), 8- இசக்கியம்மாள் (திமுக )

பாப்பாக்குடி: வார்டு 2- ஜி. சமாதானம் (மார்சிஸ்ட் கம்யூ) , 3- அ. பனிபுஷ்பம் (திமுக), 6- பிரியா (திமுக), 7- மா. செல்வி (திமுக)

மானூர்: வார்டு 1- மு. மல்லிகா (திமுக), 2- ரா. முத்துப்பாண்டி (அமமுக), 3- பா. சுதா ராணி (திமுக), 4- வே. உடையம்மை (சுயே), 5 - உமாதேவி (சுயே), 6- சண்முக சுந்தரி (திமுக), 7- ஜெனட் பாபு (சுயே), 8-அருள்தாஸ் ராஜ் (சுயே).

சேரன்மகாதேவி: வார்டு 1- ஆனந்த லட்சுமி (திமுக), வார்டு 5- கனகமணி கஸ்தூரிபாய் (திமுக)

நாங்குனேரி: வார்டு 1- ரா. இசக்கிபாண்டி (திமுக), 2- எஸ்.கே. ஸ்டீபன் ஜோசப் ராஜா (சுயே), 3. க. சங்கரலிங்கம் (அதிமுக) 4- சு. மீனா (திமுக), 5- செந்தூர்பாண்டியன் (அதிமுக), 6. ரா. முத்துலட்சுமி (சுயே), 9- சவுமியா (திமுக), 11- செ. முருகேசன் (சுயே)

ஊராட்சித் தலைவர்: மாவட்டத்தில் மொத்தமுள்ள 204 ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இரவிலும் நீடித்தது. இரவு 8 மணி நிலவரப்படி 72 ஊராட்சித் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன.

126 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. இதுபோல் மொத்தமுள்ள 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 417 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப் பட்டன. 936 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 14 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 144 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள், 221 ஊராட்சித் தலைவர்கள், 1,905 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,284 பதவிகள் உள்ளன. இவற்றுக்கு இரண்டுகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிளவில் 10 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேந்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் பார்வையிட்டார்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 ஏடிஎஸ்பிக்கள், 11 டிஎஸ்பிக்கள், 37 காவல் ஆய்வாளர்கள், 123 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1,722 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி கிருஷ்ணராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் விவரம்:

ஆலங்குளம் ஒன்றியம் (மொத்தம் 23 வார்டுகள்): வார்டு 1- செல்வக்கொடி (திமுக), 2 - பாலசரஸ்வதி (திமுக), 3- வள்ளியம்மாள் (திமுக), 4- முரளிதரன் (காங்கிரஸ்), 5- பால்துரை (திமுக), 6-அந்தோணிசாமி (மற்றவை)

கடையநல்லூர் ஒன்றியம் (மொத்தம் 12 வார்டுகள்): வார்டு 3- மணிகண்டன் (திமுக), 4- சித்ரா (திமுக), 5- சுப்பம்மாள் (திமுக), 10- சத்யகலா தீபக் (அதிமுக)

கீழப்பாவூர் ஒன்றியம் (மொத்தம்19 வார்டுகள்): வார்டு 1- ஜான்சி ஜெயமலர் (திமுக), 2 -முருகேசன் (சுயேச்சை), 3 - கனகஜோதி (காங்கிரஸ்), 5- டோ நான்சி (திமுக), 6- ஹேமா (திமுக) வார்டு 8 - புவனா (அதிமுக)

குருவிகுளம் ஒன்றியம் (மொத்தம் 17 வார்டுகள்): வார்டு 1- முத்துசாமி (திமுக), 2- அருள்குமார் (மதிமுக ), 3- சங்கீதா (மதிமுக), 4- சித்ரா (மதிமுக), வார்டு 5 - கனகேஸ்வரி (மதிமுக)

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் (மொத்தம் 12 வார்டுகள்): வார்டு 1- சுந்தரி (திமுக), 2- முருகன் (திமுக), 3 - முத்துமாரி (திமுக), 4 - கணேசன் (மற்றவை), 5- அருள்சீலி (திமுக), வார்டு 6- வேல்மயில் (திமுக)

தென்காசி ஒன்றியம் (மொத்தம் 9 வார்டுகள்): வார்டு 1- கலாநிதி (திமுக), 2- பிரியா (அதிமுக), 3 - அழகுசுந்தரம் (திமுக) மற்ற வார்டுகளில் பெரும்பாலான வற்றில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.

சங்கரன்கோவில் ஒன்றியம் (மொத்தம் 17 வார்டுகள்): வார்டு1- சமுத்திரம் (திமுக), 2- தங்கச்செல்வி (மதிமுக), 3- முத்துக்குமார் (திமுக), 4- சண்முக சுந்தரி (திமுக), வார்டு 6- பார்வதி (திமுக).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x