Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

தி.மலை மாவட்டத்தில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் - 2 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி : தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 2 இடங்களை திமுகவும், ஒரு இடத்தை அதிமுகவும் கைப் பற்றியுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் காலியாக உள்ள 66 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 170 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், 52 பேர், தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர். 118 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரிய கிளாம்பாடி, சானானந்தல், கலசப் பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இரு மரம் ஆகிய 5 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 26 வார்டு உறுப்பினர்கள் என 31 பதவிகளுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், தெள்ளார் ஒன்றியம் கூனம்பாடி ஊராட்சி ஒன்றாவது வார்டு உறுப் பினர் பதவிக்கு போட்டியிட யாரும் முன்வராததால், அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

இதையடுத்து, செய்யாறு ஒன்றியம் 10-வது வார்டு, பெரணமல்லூர் ஒன்றியம் 12-வார்டு, புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு ஆகிய 3 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் அனக்காவூர் ஒன்றியம் கோட்ட கரம், ஆரணி ஒன்றியம் அக்கரா பாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளா னந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி ஆகிய 6 ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் 25 வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 34 பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 87 பேர் போட்டியிட்டனர். 77 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 31,553 வாக்காளர்களில் 24,693 பேர் வாக்களித்தனர். 78.91 சதவீத வாக்குகள் பதிவானது.

இதைத்தொடர்ந்து 15 மையங் களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. வேட்பாளர்கள் மற்றும் முகவர் களின் முன்னிலையில் பதிவான வாக்குகளை வகைப்படுத்தி அலு வலர்கள் பிரித்தனர். அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 2 இடங்களை திமுகவும், ஒரு இடத்தை அதிமுகவும் கைப் பற்றியது. செய்யாறு ஒன்றியம் 10-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த என்.வி.பாபு, பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எல்.லட்சுமி, புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த இ.செல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

6 ஊராட்சி மன்ற தலைவர்கள்

மேலும், அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம் ஊராட்சி மன்ற தலைவராக கே.லட்சுமிபதி, ஆரணி ஒன்றியம் அக்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக அ.தாட்சாயணி, செங்கம் ஒன்றியம் இளங்குன்னி ஊராட்சி மன்ற தலைவராக ஆர்.ரேணு, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக கே.முனியம்மாள், வேளானந்தல் ஊராட்சி மன்ற தலைவராக கே.படவேட்டான், போளூர் ஒன்றியம் பொத்தேரி ஊராட்சி மன்ற தலைவராக ஏ.நாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

25 வார்டு உறுப்பினர்கள்

இதேபோல், தென்தண்டலம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக லட்சுமி, தென்இலுப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக ரஜினி, மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக மணிகண்டன், தத்தனூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக லட்சுமி, பெரும் பள்ளம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக பச்சையப்பன், கோவிலூர் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக குமரேசன், கடலாடி ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினராக சதீஷ்குமார், தென் பள்ளிப்பட்டு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக சுப்ரமணி, ஆவூர் 6-வது வார்டு உறுப்பினராக லீமாரோஸ், செவரப்பூண்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப் பினராக கிருஷ்ணமூர்த்தி, சோமாசிபாடி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக சிவக்குமார், படைவீடு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக சின்னபையன், வெண்மணி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக சரஸ்வதி, சித்தருகாவூர் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக அர்ச்சுனன், கொண்டியாங்குப்பம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஆறுமுகம், நடுக்குப்பம் 5-வது வார்டு உறுப்பினராக சந்திரகலா, எஸ்.காட்டேரி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக பச்சையப்பன்.

சென்னாவரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக வெண்ணிலா, வெளியம்பாக்கம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக பவுலின்மேரி, அப்துல்லாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக மேகலா, சிறு வஞ்சிப்பட்டு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக காசிவிஸ்வநாதன், தென்கழனி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக பழனி, வடஇலுப்பை ஊராட்சி 4-வது வார்டு உறுப் பினராக விநாயகமூர்த்தி, தச்ச ராம்பட்டு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக புனிதா, அரியாலம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக சங்கீதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்கினர். வாக்கு எண்ணும் மையங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெற்றி பெற்றவர்கள், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலன இடங்களில் திமுக ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x