விருதுநகர் குறை தீர் கூட்டத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி :

விருதுநகர் குறை தீர் கூட்டத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

வில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா(63). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் பரமசிவம், தம்பி சின்னச்சாமி ஆகியோருக்கும் இடையே இடப் பிரச்சினை உள்ளது.

கருப்பையா வீட்டுக்குச் செல்லும் பாதையை அவரது சகோதரர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு சுவர் எழுப்பி அடைத்ததாகக் கூறப்படுகிறது. பாதை இல்லாததால் இரு வீடுகள் தள்ளி உள்ள சந்து வழியாக கருப்பையா தனது வீட்டுக்குச் சென்று வருகிறார்.

இது குறித்து வில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கருப்பையா புகார் கொடுத்தார். இடப் பிரச்சினை என்பதால் வருவாய்த் துறை மூலம் தீர்வு காணும்படி போலீஸார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதையடுத்து வருவாய்த் துறையிலும் கருப்பையா புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், விருதுநகரில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்ட அரங்கிற்குள் வந்த கருப்பையா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கருப்பையாவை சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in