சேலம் மாநகரில் வளர்ச்சிப் பணிகள் - குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை :

சேலம் மாநகரில் வளர்ச்சிப் பணிகள் -  குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை :
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பிளாஸ்டிக் இல்லா நகரமாக உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ‘நமக்கு நாமே திட்டம்’ மூலம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ‘நகருக்குள் வனம்’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள்நடுதல், நீர்நிலைகளை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. “பொதுமக்கள் நலன் கருதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளுக்கும் மாநகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in