வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட - புலம்பெயர் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு :

தியாகதுருகம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்.
தியாகதுருகம் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தியாகதுருகம், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் ஆகிய 5 ஒன்றியங்களில் நடைபெற்றது.

5 ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் சென்னை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக அந்த கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்கு தனியாக வாகன வசதி செய்து, அவர்களை நேற்று அழைத்து வந்தனர். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டு வாக்களிக்கச் செய்தனர். அதேபோன்று உள்ளூரில் வசிக்கும் வயதான மூதாட்டிகள், மாற்றுத்திறனாளிகளும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிப்பதற்காக ஆர்வமுடன் வந்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in