திருச்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தியோருக்கு - எல்இடி டிவி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கல் :

திருச்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தியோருக்கு -  எல்இடி டிவி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கல் :
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, திருச்சி மாநகராட்சி சார்பில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாநகரில் அக்.3-ம் தேதி 193 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மேலும், 2 நடமாடும் தடுப்பூசி குழு மூலமும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நடமாடும் குழுவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாரிசங்கர் என்பவருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவியை மாநகராட்சி நகர் நல அலுவலர் யாழினி நேற்று வழங்கினார்.

இதேபோல, கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சைக்கிள், பட்டுப்புடவை, மினி ஹாட் பாக்ஸ், ரூ.1,000 மதிப்பில் மளிகைப் பொருட்கள் ஆகிய பரிசுகளை உதவி ஆணையர் செல்வ பாலாஜி வழங்கினார்.

இதேபோல, திருச்சி மாநகரில் இன்று நடைபெறவுள்ள முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரில் தேர்வு செய்யப்படுவோருக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் இன்று 529 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in