வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு :

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஆவரைக்குளம் டிடிடிஏ பள்ளி வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஆவரைக்குளம் டிடிடிஏ பள்ளி வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பல்வேறு வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் சங்கனாபுரம் ஊராட்சியில் இந்து நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் வாக்களிக்க வந்த 88 வயது மூதாட்டி சங்கரம்மாள் சக்கர நாற்காலி இல்லாததால் அவதியுற்றார்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூதாட்டியை வாக்குச் சாவடிக்கு தூக்கி வந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து தெரியவந்ததும், அந்த வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏற்பாடுகளை செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் வாக்குப்பதிவு க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. 5 ஏடிஎஸ்பி, 15 டிஎஸ்பிக்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in