Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM

நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் - சேலம் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்று நட இலக்கு :

சேலம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகருக்குள் வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் அஸ்தம்பட்டி மண்டலம் சின்னதிருப்பதி கோகுல் நகர் பேஸ்.1 அனெக்ஸ்ல் 14000 சதுரஅடி பரப்பில் 1250 மரக்கன்றுகள் நடும் விழா மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்சியர் கார்மேகம் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் மணக்காடு காமராஜர் நகரவை மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஜெயராம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் வேம்பு, பேரிச்சம், புங்கன், பூவரசு, நாவல், நெல்லி போன்ற மரக் கன்றுகள் நடப்பட்டன.

சேலம் மாநகராட்சியில் நகருக்குள் வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 71 இடங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 45 இடங்களில் 60,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40,000 மரக்கன்றுகள் விரைவில் நட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையர் மணிமொழி, கோகுல் நகர் குடியிருப்பு சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x