கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 441 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  441 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்  :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 55 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதுவரை 7 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணை 6 லட்சத்து 30 ஆயிரத்து 392 பேருக்கும், 2-வது தவணை 1 லட்சத்து 61 ஆயிரத்து 385 நபர்களுக்கு செலுத் தப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 வாரங்களாக நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை நோய் தொற்றுக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாளை 441 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாமகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இருவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in