Regional01
அக்.21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த சாலையோர வியாபாரிகள் முடிவு :
பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் வரதராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் சரண், ரங்கநாதன், சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத தள்ளுவண்டி கடைகளை உடைத்து, அராஜகத்தில் ஈடுபட்ட நகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்.21-ம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
