

செங்கோட்டையில் தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
செங்கோட்டை கே.சி. சாலை ஆறுமுகபடையாச்சி மனைவி இசக்கியம்மாள் (70). இவரிடமிருந்த நிலத்தையும், பீடி சுற்றியதற்கான ஓய்வூதியத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு இவரது இளைய மகன் மாரியப்பன் (43) வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9.6.2020-ம் தேதி இது தொடர்பாக தாயிடம் மாரியப்பன் தகராறு செய்துள்ளார். அப்போது இசக்கியம் மாள் தாக்கப்பட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செங்கோட்டை போலீஸார் விசாரித்து, மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.