Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM

நெல்லை மாவட்டத்தில் 9 மையங்களில் - ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை :

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 மையங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகா தேவி, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள் ளது. நாங்குநேரி, களக்காடு, ராதாபுரம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்குப்பின் வரும் 12-ம் தேதி 9 மையங்களில் வாக்கு எண்ணும்பணி நடைபெறு கிறது. அம்மையங்கள் விவரம்:

அம்பாசமுத்திரம்- அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, இருதயகுளம், விக்கிரமசிங்கபும். சேரன்மகாதேவி- பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி. மானூர்- ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை. பாளையங்கோட்டை- ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கந்தான்பாறை, முன்னீர்பள்ளம். பாப்பாக்குடி- இடைகால் மெரிட் தொழில் நுட்பக் கல்லூரி. நாங்குநேரி- ரெக்ட் தொழில்நுட்பக் கல்லூரி, தெற்கு விஜயநாரயணம். களக் காடு- திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளி. ராதா புரம்- தெற்கு கள்ளிகுளம் தட்சண மாற நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. வள்ளியூர்- அடங்கார்குளம் அழகநேரி எஸ்.ஏ. ராஜா கலைக்கல்லூரி.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x