

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி சக்தி நகரைச் சேர்ந்தவர் இ.கோபி(36). திருச்சியில் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் எஸ்.செந்தில்குமார், இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர். இருவரும் நேற்று முன்தினம் இரவு காரில் சென்னை சென்று விட்டு நேற்று திருச்சி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கோபி ஓட்டி வந்தார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில், அந்த இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.